தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி பற்றி தெரியவரும்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் யாருடன் கூட்டணி என்பதை அதிமுக தலைமை தெரிவிக்கும் என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி பற்றி தெரியவரும்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் யாருடன் கூட்டணி என்பதை அதிமுக தலைமை தெரிவிக்கும் என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.
 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் தென்பாதியில் வேளாண்துறை சார்பில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தென்னைப் பண்ணையை அமைச்சர் ஆர். காமராஜ் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 தேர்தல் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் யாருடன் கூட்டணி என்பதை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக அமையும்.
 தேர்தலை மையப்படுத்தி நலத் திட்டங்களை அதிமுக அரசு அறிவிப்பதில்லை. சட்டப் பேரவையில் ஏழை தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபோது எந்தக் கட்சி தலைவரும், உறுப்பினரும் எதிர்க்கவில்லை. இந்தத் திட்டம் 60 லட்சம் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. மக்கள் நலத் திட்டங்களை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம். அதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது என்றார் அமைச்சர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com