நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: சுகாதாரத் துறைக்கு புதிய செயலாளர் நியமனம்

தமிழகத்தில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: சுகாதாரத் துறைக்கு புதிய செயலாளர் நியமனம்

தமிழகத்தில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்து வந்த ஜெ.ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.
 அதன் விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
 ஜெ.குமரகுருபரன்- பேரிடர் மேலாண்மை இயக்குநர் (பத்திர பதிவுத் துறை தலைவர்)
 கே.ராஜாமணி- கோவை மாவட்ட ஆட்சியர் (திருச்சி மாவட்ட ஆட்சியர்)
 எஸ்.சிவராசு- திருச்சி மாவட்ட ஆட்சியர் (வணிகவரிகள் இணை ஆணையாளர்- கோவை)
 டி.என்.ஹரிஹரன்-நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிறப்புச் செயலாளர் (கோவை மாவட்ட ஆட்சியர்)
 கே.விஜயகார்த்திகேயன்- தமிழ்நாடு நகர்ப்புற கல்விக் கழகத்தின் இயக்குநர்-கோவை (கோவை மாநகராட்சி ஆணையாளர்)
 சுகாதாரத் துறைச் செயலாளர்:
 டி.கார்த்திகேயன்- நகராட்சி நிர்வாக ஆணையாளர் (பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்)
 பி.உமா மகேஸ்வரி- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் (தமிழ்நாடு சுகாதார சேவைகள் திட்ட இயக்குநர்)
 டி.ஆனந்த்- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் (தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய இணை நிர்வாக இயக்குநர்)
 பீலா ராஜேஷ்- சுகாதாரத் துறைச் செயலாளர் (இந்திய மருத்துவத் துறை ஆணையாளர்)
 ஜெ.ராதாகிருஷ்ணன்-போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் (சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர்)
 எஸ்.கணேஷ்- இந்திய மருத்துவத் துறை இயக்குநர் (புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்)
 பி.காயத்ரி கிருஷ்ணன்-வணிக வரிகள் இணை ஆணையாளர்-அமலாக்கம், கோவை (பொள்ளாட்சி சார் ஆட்சியர்)
 கா.பாலச்சந்திரன்- பத்திரப் பதிவுத் துறை தலைவர். (வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர்)
 மாநகராட்சி ஆணையாளர்:
 எஸ்.நாகராஜன்- தமிழ்நாடு சுகாதார சேவைகள் திட்ட இயக்குநர் (சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர்)
 எஸ்.ஜெயந்தி-தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்)
 ஷ்ரவண் குமார் ஜடவத்- கோவை மாநகராட்சி ஆணையாளர் (திருப்பூர் சார் ஆட்சியர்)
 ஜி.பிரகாஷ்- பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் (நகராட்சி நிர்வாக ஆணையாளர்)
 எஸ்.அனீஷ் சேகர்- தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (மதுரை மாநகராட்சி ஆணையாளர்)
 எஸ்.விசாகன்- மதுரை மாநகராட்சி ஆணையாளர் (தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர்)
 எல்.நிர்மல்ராஜ்- தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய இணை நிர்வாக இயக்குநர் (திருவாரூர் மாவட்ட ஆட்சியர்)
 அல்பி ஜான் வர்கீஸ்-பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையாளர்-தெற்கு (தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர்)
 எஸ்.கோபால சுந்தரராஜ்-தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை நிர்வாக இயக்குநர் (பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்-தெற்கு)
 வி.பி.ஜெயசீலன்-தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை துணைச் செயலாளர்)
 சுபோத் குமார்- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் இணை நிர்வாக இயக்குநர் (பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல இணை ஆணையாளர்- மத்தியப் பகுதி)
 பி.என்.ஸ்ரீதர் - பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல இணை ஆணையாளர்- மத்தியப் பகுதி (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் இணை நிர்வாக இயக்குநர்).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com