திமுக - காங்கிரஸ் கூட்டணி நாளை இறுதி செய்யப்படும்: கேஎஸ். அழகிரி

திமுக - காங்கிரஸ் கூட்டணி நாளை இறுதி செய்யப்படும்: கேஎஸ். அழகிரி

திமுக - காங்கிரஸ் கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  

திமுக - காங்கிரஸ் கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கூட்டணி தொடர்பான திரை மறைவு வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுகின்றன. 

அதேபோல், தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம்பெறும் என்று தெரிகிறது. மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 

இதனிடையே திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் அதில் அடங்கும். இந்நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என்று  தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பாஜக-அதிமுக அணியில் பாமக சேர்ந்தது வரலாற்றுப் பிழை. திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது பாமக. திமுக - காங்கிரஸ் கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com