11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவோரை மாற்ற வேண்டுமென்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டனர். 


மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவோரை மாற்ற வேண்டுமென்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டனர். 
இதுகுறித்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அடைப்புக்குறிக்குள் அதிகாரிகள் முன்பு வகித்த பதவியின் விவரம்)
சி.கே.காந்திராஜன்---தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் (மாநில மனித உரிமைகள் ஆணைய டிஜிபி).
ஸ்ரீலட்சுமி பிரசாத்---மாநில மனித உரிமைகள் ஆணைய டிஜிபி (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் விழிப்புப்பணி டிஜிபி).
அபய்குமார் சிங்--- சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி. கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு காகித ஆலை நிறுவன தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி.
இ.டி.சாம்சன்---ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. (கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி., ராமநாதபுரம்).
பி.ராஜன்---திருநெல்வேலி மாநகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையாளர் (ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.).
சுகுணாசிங்----பெருநகர சென்னைதிருவல்லிக்கேணி துணை ஆணையாளர் (திருநெல்வேலி மாநகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையாளர்) .
வி.பாலகிருஷ்ணன்---வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் (பெருநகர சென்னை காவல் துறையின் கிழக்கு மண்டல இணை ஆணையாளர்).
வி.வனிதா---பெருநகர சென்னை காவல் துறையின் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் (வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர்).
என்.பாஸ்கரன்---திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் (தமிழ்நாடு போலீஸ் அகாதெமி தலைவர்).
மகேந்தர் குமார் ரத்தோர்----தமிழ்நாடு போலீஸ் அகாதெமி துணைத் தலைவர் (திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர்).
எஸ்.செல்வநாகரத்தினம் -கடலோரக் காவல் படை எஸ்.பி. ராமநாதபுரம் (பெருநகர சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com