40 தொகுதிகளிலும் மோடியே வேட்பாளர்: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து

40 தொகுதிகளிலும் மோடியே வேட்பாளர் எனக்கருதி கடுமையாக உழைத்திடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
40 தொகுதிகளிலும் மோடியே வேட்பாளர்: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து

40 தொகுதிகளிலும் மோடியே வேட்பாளர் எனக்கருதி கடுமையாக உழைத்திடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டிஅதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பாமக அதிகாரபூர்வமாக இணைந்துள்ளன. பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும்  ஒதுக்கப்பட்டுள்ளன. 

பாஜகவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வுக்கான தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இருவரும் செவ்வாய்க்கிழமை கூட்டாக வெளியிட்டனர். 

இதுகுறித்து ஹெச்.ராஜா தனது டிவிட்டரில்,
தமிழகத்தில் மத்தியில் நிலையான ஆட்சியையும் மோடிஜி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வலிமையான கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. 

பாஜகவைப் பொருத்தவரை 40 தொகுதிகளிலும் மோடிஜியே வேட்பாளர் எனக் கருதி கடுமையாக உழைத்திடுவோம். தீயசக்தி திமுகவிற்கு பாடம் புகட்டும் நேரமாவது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com