கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டு வரும் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்றார் மத்திய இணை அமைச்சர்
கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டு வரும் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
அதிமுக-பா.ஜ.க.கூட்டணிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.  பிரதமர் மோடி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்கள் நலத்திட்டங்களைக் கூறி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். நாட்டின் நலனைப் பற்றி கவலைப்படாதவர்கள் ஒரு கூட்டணியிலும், நாட்டின் நலனில் அக்கறைக் கொண்டவர்கள் ஒரு கூட்டணியிலும் இருந்து தேர்தலைச் சந்திக்கிறோம்.  நாட்டு நலனை விரும்புபவர்களே பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்  என்பது இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இதில் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒரே கருத்துடன் இருந்து வருகின்றனர். எனவே இதை பாகுபடுத்தி பார்க்கக்கூடாது. விரைவில் இத்தாக்குதலுக்கு பதிலடித் தரப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து, கும்பகோணம் அருகே திருபுவனத்தில் கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய  பின்னர்,  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: நாற்பது மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும். தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு அமைச்சர் பதவி குறித்து பிரதமர் முடிவெடுப்பார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com