தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

சென்னையில் தங்கத்தின் விலை புதன்கிழமை மீண்டும் உயர்ந்தது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.25,808-க்கு விற்ப


சென்னையில் தங்கத்தின் விலை புதன்கிழமை மீண்டும் உயர்ந்தது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.25,808-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.3,226-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து ரூ.44.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.44,100 ஆகவும் இருந்தது. 
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,226
1 பவுன் தங்கம்    25,808
1 கிராம் வெள்ளி    44.10
1 கிலோ வெள்ளி    44,100
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com