நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்ரவரி 24 முதல் விருப்பமனு விநியோகம்: விஜயகாந்த்

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்ரவரி 24 முதல் விருப்பமனு விநியோகம்: விஜயகாந்த்

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் நம் இந்திய நாட்டில் பதினேழாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 

அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் நாடாளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 06.03.2019 புதன்கிழமை மாலை 5மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 20 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

அதிமுக-பாஜக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் தேமுதிகவில் விருப்பமனு விநியோகம் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com