கோட்டக்குப்பம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள்!

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடற்கரையோரம் புதன்கிழமை கரை ஒதுங்கிய கோள வடிவ மர்மப் பொருளால் மீனவ மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள்.
கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள்.


விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடற்கரையோரம் புதன்கிழமை கரை ஒதுங்கிய கோள வடிவ மர்மப் பொருளால் மீனவ மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டக்குப்பம் அருகேயுள்ள சோதனைக்குப்பம் கடற்கரையோரம் சுமார் ஒரு அடி உயர கோள வடிவிலான மர்மப் பொருள் ஒன்று புதன்கிழமை பிற்பகலில் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மீனவ மக்கள், அது வெடிகுண்டாக இருக்கலாம் என அச்சமடைந்து, கோட்டக்குப்பம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் திருமணி, உதவி ஆய்வாளர் நாகராஜ் உள்ளிட்டோர் விரைந்து சென்று, அந்த மர்மப் பொருளைப் பார்வையிட்டனர். 1.5 அடி உயரமும், 46 இன்ச் சுற்றளவும், 10 கிலோ எடையும் கொண்ட அந்தப் பொருள், என்னவென்பதை உறுதி செய்ய, அதனை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய் தங்கம் வந்து, அந்த மர்மப் பொருளை பார்வையிட்டார். தொடர்ந்து, தடய அறிவியல் துறை துணை இயக்குநர் விசாலாட்சி, உதவி இயக்குநர் முத்து ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்தப் பொருளை ஆய்வு செய்ததில், அது வெடிபொருள் இல்லை என்பதை உறுதி செய்தனர். 
மேலும், அந்தப் பொருள் துறைமுகப் பகுதிக்கு வரும் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக, தண்ணீரில் மிதக்க பயன்படுத்தப்படும் மிதவை என்பது தெரியவந்தது. ஒளிரும் பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட அந்த கோளத்தின் உள்ளே காற்று அடைக்கப்பட்டிருக்கும். அதனால், அது மிதக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com