13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் உள்பட 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளையிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் உள்பட 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளையிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவு (பழைய பணி அடைப்புக்குள்):
வி.பாலகிருஷ்ணன்-சென்னை பெருநகர காவல்துறையின் கிழக்கு மண்டல இணை ஆணையர் (சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர்), டி.எஸ்.அன்பு-சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் (சென்னை பெருநகர காவல்துறையின் கிழக்கு மண்டல இணை ஆணையர்), பண்டிட் கங்காதர்-கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்), டி.மகேஷ்குமார்-தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்), ஜார்ஜி ஜார்ஜ்-சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு மேற்கு மண்டல துணை ஆணையர் (சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்), எஸ்.தீபா கனிகர்-சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு மேற்கு மண்டல துணை ஆணையர்), இ.டி.சாம்சன்-தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் (சென்னை காவல்துறையின் பூக்கடை துணை ஆணையர்) டி.அசோக்குமார்-சென்னை காவல்துறையின் தியாகராயநகர் துணை ஆணையர் (தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர்), பி.அரவிந்தன்-சென்னை காவல்துறையின் பூக்கடை துணை ஆணையர் (சென்னை காவல்துறையின் தியாகராயநகர் துணை ஆணையர்), ரவாளி பிரியா காந்தபுனேனி-சென்னை காவல்துறையின் மாதவரம் துணை ஆணையர் (சென்னை காவல்துறையின் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர்), சி.கலைச்செல்வன்-சென்னை காவல்துறையின் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் (சென்னை காவல்துறையின் மாதவரம் துணை ஆணையர்), டி.செந்தில்குமார்-ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் 11-ஆவது அணி கமாண்டன்ட் (தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்), எஸ்.எஸ்.மகேஷ்வரன்-தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையின் 11வது அணி கமாண்டன்ட்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com