47 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 47 படகுகளை விடுவிக்க அந்த நாட்டு அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 47 படகுகளை விடுவிக்க அந்த நாட்டு அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. 
இதனையடுத்து படகுகளை மீட்க மீன்வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஜனவரி 16 ஆம் தேதி இலங்கை செல்கின்றனர். 
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டன.
இதனைத்தொடர்ந்து படகுகளை விடுவிக்கவும், தமிழகத்துக்கு எடுத்து வருவதற்கான தகுதியான படகுகளை அடையாளம் காணவும் ராமநாதபுரம் மண்டல மீன்வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் ஜானிடா வர்கீஸ், உதவி இயக்குநர் கதிரேசன் உள்ளிட்டோர் கடந்த அக்டோபரில் இலங்கைக்கு சென்று வந்தனர். 
இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் 47 படகுகள் தமிழகத்துக்கு எடுத்து வரும் வகையில் தகுதியானதாக இருப்பது தெரியவந்தது. 
இந்நிலையில் 47 படகுகளையும் தமிழகத்துக்கு எடுத்துச்செல்ல இலங்கை அரசு அனுமதித்திருப்பதாக ராமநாதபுரம் மண்டல மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக வரும் 16 ஆம் தேதி மீன்வளத்துறை அதிகாரிகள் இலங்கை செல்கின்றனர். இதனைத்தொடர்ந்து படகுகளை எடுத்து வர, வரும் 17 ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள் அடங்கிய குழு ஒன்றும் இலங்கைக்குச் செல்ல திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com