தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை: ஆனால் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை!

தமிழகத்தில் ஜனவரி மாதம் மட்டும் 16, 21, 26 ஆகிய மூன்று தினங்களில் அனைத்து வகை மதுக் கடைகள்,  மதுபானக் கூடங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு அரசு டாஸ்மாக் மதுக் கடைகள், அரசு மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்படவேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வருகிற 16.1.2019 (திருவள்ளுவர் தினம்), 21.1.2019 (வள்ளலார் நினைவு தினம்) 26.1.2019 (குடியரசு தினம்) ஆகிய 3 நாள்களிலும், அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், அரசு மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

இதனால், இந்த மூன்று நாள்களிலும் மதுக் கடைகள்,  மதுபானக் கூடங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com