ராமேசுவரத்தில் புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தங்கள்: பக்தர்கள் நீராட ஆளுநர் அர்ப்பணிப்பு

ராமேசுவரத்தில் புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமை பக்தர்களுக்கு அர்ப்பணித்தார்.
ராமேசுவரத்தில் புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தங்கள்: பக்தர்கள் நீராட ஆளுநர் அர்ப்பணிப்பு

ராமேசுவரத்தில் புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமை பக்தர்களுக்கு அர்ப்பணித்தார்.
 ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலின் உள் பகுதியில் 22 புனித தீர்த்தங்கள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளன. இதில், கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள் முழுமையாக பரமரிக்கப்பட்டு, பக்தர்கள் புனித நீராட பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வெளிப்பகுதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த தீர்த்தங்கள் பராமரிப்பின்றி காணப்பட்டன.
 இந்நிலையில், வெளிப்பகுதியில் தீர்த்தக் குளங்களாக கண்டறியப்பட்ட 30 தீர்த்தங்களை மறு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், தீர்த்தக்குளங்களை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தங்கச்சிமடம் ஊராட்சியில் உள்ள மங்கள தீர்த்தக்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புனித நீரை தீர்த்தக் குளத்தில் ஊற்றி பக்தர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
 இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், தென்மண்டல காவல்துறை தலைவர் சண்முக ராஜேஷ்வரன், காவல்துறை துணைத் தலைவர் காமினி,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ஊராட்சிகள் இணை இயக்குநர் கேசவதாசன் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 இதனையடுத்து, ராமேசுவரத்தில் லட்சுமண தீர்த்தம் அருகேயுள்ள தனியார் மடத்தில் ராமேசுவரம் தீவு அபிவிருத்திக் குழு மற்றும் பசுமை ராமேசுவரம் திட்டம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் வீரராகவராவ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் பேசுகையில், விவேகானந்த கேந்திரம் சார்பில் 30 தீர்த்தங்கள் கண்டறியப்பட்டு புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.
 இதனைத் தொடர்ந்து ஆளுநர் பேசியது:
 ராமேசுவரத்தில் உள்ள பல புனித தீர்த்தங்கள் ராமாயணத்துடன் தொடர்பு உள்ளவை. ராமேசுவரத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அப்துல்கலாம் உலகில் சிறந்த விஞ்ஞானி என்ற நிலையை அடைந்தார். அவர் நாட்டின் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார். ராமேசுவரத்தின் வளர்ச்சிக்காக பசுமை ராமேசுவரம் திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் நீரின் முக்கியத்துவம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பாரம்பரியம், சூழல் சுற்றுலா மற்றும் பசுமை போக்குவரத்து உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தார்.
 இந்திய கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தின் பெருமையை உலகுக்கு பறைசாற்றிய சுவாமி விவேகானந்தர் ராமேசுவரத்துக்கு வந்துள்ளார்.
 இந்தியா ஒரு தூய்மை நாடாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறார் என்றார்.
 சுவாமி தரிசனம்: பின்னர் ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு ஆளுநர் சென்றார். அங்கு அவருக்கு கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு பூûஐகள் செய்து ஆளுநர் வழிபாடு நடத்தினார்.
 இதனையடுத்து, சங்கர மடத்திற்குச் சென்ற ஆளுநருக்கு மடத்தின் மேலாளர் சுந்தரம் வாத்தியார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அயூள்கால பூûஐகளில் ஆளுநர் பங்கேற்றார்.
 அங்கு, அனைத்து விசைப்படகுகள் மீனவ சங்க கூட்டமைப்பு செயலாளர் ஜேசுராஜ், பொருளாளார் சகாயம், ஆலோசகர் தேவதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com