சுடச்சுட

  

  சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம்: ஜன.16-இல் முதல்வர் திறந்துவைக்கிறார்

  By DIN  |   Published on : 14th January 2019 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  eps

  சேலத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 16 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
   சேலத்தில் கடந்த 2017 செப்டம்பர் மாதம் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாநகரில், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவச் சிலைகளுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.
   அதைத்தொடர்ந்து, 2018 ஏப்ரல் 29- ஆம் தேதி மாநகராட்சி அண்ணா பூங்கா அருகே ரூ.80 லட்சம் மதிப்பில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மணிமண்டபம் கட்டும் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்தப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வரும் 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறார்.
   நிழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai