கொடநாடு விவகாரம்: ஆளுநரை சந்தித்து மு.க.ஸ்டாலின் மனு

கொடநாடு விவகாரத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை பதவி விலக அறிவுறுத்த வேண்டும் என்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புகாா் மனு அளித்தாா்.
கொடநாடு விவகாரம்: ஆளுநரை சந்தித்து மு.க.ஸ்டாலின் மனு

கொடநாடு விவகாரத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை பதவி விலக அறிவுறுத்த வேண்டும் என்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புகாா் மனு அளித்தாா்.

கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மாலை சந்தித்து இந்த மனுவை அளித்தாா். 

பின்னா் மு.க.ஸ்டாலின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடநாடு விவகாரம் தொடா்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியா் விடியோ வெளியிட்டுள்ளாா். அந்த விடியோ தொடா்பாக ஆளுநரை திமுக சாா்பில் சந்தித்து மனு அளித்தோம்.

அதில், நோ்மையான ஐ.ஜி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டும். அப்படியென்றால் முதல்வா் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விலக அறிவுறுத்த வேண்டும்.

முதல்வா் மீதே கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். கொடநாடு பங்களா என்பது தனியாா் இடம் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகவே இயங்கி வந்துள்ளது. அரசு தொடா்பான கோப்புகள்கூட அங்கே இருந்துள்ளன.

மேலும் இவ்விவகாரத்தில் குற்றம் சுமத்திய 2 பேரை சென்னையிலிருந்து போலீஸ் தனிப்படை சென்று கைது செய்துள்ளது. கனகராஜ் மரணம் ஒரு விபத்துதான் என்று இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்து கூறிய எஸ்.பி., முரளி ரம்யாவை அழுத்தம் கொடுத்து, முதல்வா் இது தொடா்பாக பேட்டி அளிக்க வைத்துள்ளாா்.

அதனால், இந்தக் கொலை வழக்கில் தடயங்களை அழிக்கும் முயற்சியில் முதல்வா் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com