தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி முடிவு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி முடிவு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்று கேட்கிறீர்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்.
பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஜனவரி 18-ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். அப்போது அவரை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்புகிறீர்கள். இதுவரை சந்திப்பது குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை.மேலும் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வரும் தகவலில் உண்மை இல்லை. அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கும்போது முதலில் செய்தியாளர்களுக்குத்தான் தெரிவிக்கப்படும். 
ஜனவரி 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருவது குறித்து கேட்கிறீர்கள். இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. 
திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் தாமரை மலருமா என்றும் கேட்கிறீர்கள். அவரவர் சார்ந்திருக்கும் கட்சிகளைப் பற்றி பேசுவது வாடிக்கையானதுதான்.
அதிமுக மூன்றாவது அணியில் இடம்பெறுமா எனக் கேட்கிறீர்கள். அவசரப்படாதீர்கள். நல்லது நடக்கும்.
கூட்டணிக்கான கதவுகள் திறந்திருப்பதாகவும், பழைய கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் மோடி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பன்னீர்செல்வம், ஆண்டுக்கு ஆண்டு கூட்டணி மாறியிருக்கிறது என்கிற அடிப்படையில் பாஜக முதலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது. பிறகு திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அதன்பிறகு, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தது. அரசியல் ரீதியாக கூட்டணி மாறுபட்டிருக்கிறது. தேர்தல் வரும் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்றார்.
கொடநாடு விவகாரம் நடைபெற்று முடிந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாத சக்தியற்ற கட்சிகள் இதுபோன்ற அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றன. 
குறுகிய வழியில் அரசியல் லாபம் தேடலாம் என நினைக்கின்றனர். அது நடக்காது. நியாயம் எங்கள் பக்கம் உள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com