கோவை-கேரள வனப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம்: நக்ஸல் தடுப்புப் பிரிவினர் தேடுதல் வேட்டை

மாவோயிஸ்ட் இயக்கத்தினர் நடமாட்டம் தொடர்பாக கோவை-கேரள எல்லை வனப் பகுதியில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் மூன்று நாள்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


மாவோயிஸ்ட் இயக்கத்தினர் நடமாட்டம் தொடர்பாக கோவை-கேரள எல்லை வனப் பகுதியில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் மூன்று நாள்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 கோவை-கேரள எல்லையில் உள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அவர்களைத் தேடும் பணியில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை-கேரள எல்லைகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் அங்குள்ள தேயிலைத் தோட்டப் பணியாளர்களுடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு உரையாடியதாகத் தகவல்கள் வெளியாகின. 
 இதன்பேரில் இப்பகுதிகளில் மூன்று நாள்கள் தேடுதல் நடத்த நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் முடிவு செய்தனர். இதன்படி கவுண்டம்பாளையம் வழியாக கேரளம் செல்லும் வழியில் உள்ள எழிச்சூர், தடாகம் வழித்தடத்தில் உள்ள கோபனேரி, கவுண்டப்பன்புதூர், மூணுகுட்டையூர், சேத்துமடை, பில்லூர், ஆனைகட்டி, சேம்புக்கரை, ஆலமரமேடு, தூவைப்பதி உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை முதல் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதில் அரசாங்கத்தைக் கண்டித்து இருமாநில எல்லைகளில் மாவோயிஸ்டுகள் ஒட்டியிருந்த சுவரொட்டிகளையும், துண்டுப் பிரசுரங்களையும் நக்ஸல் தடுப்புப் பிரிவனர் கைப்பற்றினர். சனிக்கிழமை வரையில் தேடுதல் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com