எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை: தம்பிதுரை

எங்கள் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இல்லை என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை: தம்பிதுரை

எங்கள் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இல்லை என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டு இல்லை. ஆதரிப்பது என்பதற்குக் கூட்டணி இருக்க வேண்டும். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நட்பு இருக்கிறது. நட்பு என்பது வேறு. அரசியல் உடன்பாடு என்பது வேறு. எங்கள் கூட்டணியில் பாஜக கிடையாது. அதற்கான கேள்வி எழாத நிலையில், அதைப் பற்றி எதற்காகப் பேச வேண்டும். 
நான் இதுவரை தமிழகத்தின் உரிமைகள் குறித்துதான் பேசினேன். 
அந்த உரிமைகளில் பலவற்றை தமிழகத்துக்கு மத்திய அரசுக் கொடுக்கவில்லை என்பது எனது ஆதங்கம். அதைத்தான் நான் கூறினேன். ஜி.எஸ்.டி., காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகள்,  நீட் தேர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு உதவவில்லை என்பதைத்தான் கூறி வருகிறேன். அதைத்தான் நாடாளுமன்றத்திலும் பேசினேன்.
அதற்காக நான் இப்படி பேசுகிறேன், அதற்காகப் புதிய கட்சியை நான் தொடங்குகிறேன் என புதிய கதையை உருவாக்கினால் நான் என்ன செய்வது? என்னைப் பற்றி தவறான செய்திகள் பரவி வருகின்றன. 
ஆனால், தனிக்கட்சி தொடங்கும் அளவுக்கு எனக்குத் தகுதி இல்லை. அப்படிப்பட்ட ஆளும் நானில்லை. நான் அதிமுகவின் தொண்டன். எனக்குக் கட்சி அதிமுகதான் என்றார் தம்பிதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com