ஜன.25-​இல் கட​லோர தமி​ழ​கத்​தில் லேசான மழை

இந்​திய பெருங்​க​டல் பகு​தி​யில் நிலை​கொண்​டுள்ள காற்​ற​ழுத்​தத் தாழ்​வுப் பகுதி கார​ண​மாக, கட​லோர தமி​ழ​கத்​தில் ஓரிரு இடங்​க​ளில் வரும் வெள்​ளிக்​கி​ழமை (ஜன.25) லேசான மழை


இந்​திய பெருங்​க​டல் பகு​தி​யில் நிலை​கொண்​டுள்ள காற்​ற​ழுத்​தத் தாழ்​வுப் பகுதி கார​ண​மாக, கட​லோர தமி​ழ​கத்​தில் ஓரிரு இடங்​க​ளில் வரும் வெள்​ளிக்​கி​ழமை (ஜன.25) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதி​காரி செவ்​வாய்க்​கி​ழமை கூறி​யது: இந்​திய பெருங்​க​டல் பகு​தி​யில் 
காற்​ற​ழுத்​தத்​தாழ்​வுப் பகுதி நிலை​கொண்​டுள்​ளது. இதன்​கா​ர​ண​மாக, கட​லோர தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சே​ரி​யில் ஓரிரு இடங்​க​ளில் வரும் 25-ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.
​வ​றண்ட வானிலை: ​த​மி​ழ​கம் மற்​றும் புதுச்​சே​ரி​யில் புதன்​கி​ழ​மை(​ஜன.23), வியா​ழக்​கி​ழமை (ஜன.24) ஆகிய இரண்டு நாள்​க​ளில் வறண்ட வானிலை காணப்​ப​டும்.
நீல​கிரி மாவட்​டத்​தில் மலைப்​ப​கு​தி​க​ளில் ஓரிரு இடங்​க​ளில் புதன்​கி​ழமை இரவு உறை​பனி காணப்​ப​டும். சென்​னை​யில் ஓர​ளவு மேக​மூட்​ட​மாக இருக்​கும். அதி​காலை வேளை​யில் மூடு​பனி காணப்​ப​டும் என்​றார் அ​வர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com