மீண்டும் வாக்குச்சீட்டு முறையே திமுகவின் நிலைப்பாடு: கனிமொழி 

நாடு முழுவதும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
மீண்டும் வாக்குச்சீட்டு முறையே திமுகவின் நிலைப்பாடு: கனிமொழி 


நாடு முழுவதும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது: வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் பல மோசடிகள் தொடர்ந்து நடைபெறுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பல முன்னேறிய நாடுகள்கூட வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்துகின்றன. வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.
தமிழகத்தில் கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வராமல், அவர்களை அரசு கைதுசெய்து, அச்சுறுத்தி வருகிறது.
போராட்டத்தில் ஈடுபடுவோரை அச்சுறுத்தியே போராட்டத்தை அடக்கிவிடலாம் என நினைக்கும் அதிமுக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
முன்னதாக, தூத்துக்குடியில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அவர் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com