மானிய விலையில் நிலம், மின்சாரம் அளித்தால் புதுவையில் ரூ.100 கோடி முதலீடு செய்யத் தயார்

மானிய விலையில் நிலம், மின்சாரம் அளித்தால், புதுவையில் ஆண்டுக்கு ரூ.100 கோடி முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக, முதல்வர் வே.நாராயணசாமியிடம்  செல்லிடப்பேசி உதிரிபாகங்கள் உற்பத்தி
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில்முனைவோருக்கான ஆலோசனைக் கூட்டம்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில்முனைவோருக்கான ஆலோசனைக் கூட்டம்.

மானிய விலையில் நிலம், மின்சாரம் அளித்தால், புதுவையில் ஆண்டுக்கு ரூ.100 கோடி முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக, முதல்வர் வே.நாராயணசாமியிடம்  செல்லிடப்பேசி உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் வாக்குறுதி அளித்தன.
புதுச்சேரியில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக முதல்வர் நாராயணசாமி தலைமையில்  தொழில்முனைவோருக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
மாநில அரசு மற்றும் மத்திய நிதி ஆயோக் அமைப்பு சார்பில் இரு நாள்கள் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செல்லிடப்பேசி மற்றும் இதர மின்னணு தொழில்சாலைகளை புதுவையில் தொடங்குவது தொடர்பாகவும், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு இறுதி வடிவம் கொடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாநில தொழில் துறை அமைச்சர் ஷாஜகான்,  நிதி ஆயோக் கூடுதல் செயலர் யதுவேந்திரா மாத்தூர், பிப்டிக் தலைவர் இரா.சிவா எம்எல்ஏ,  இந்தியன் செல்லுலர் சங்கத் தலைவர் பங்கஜ் மஹேந்தரு, நிதி ஆயோக் முதுநிலை ஆலோசகர்  முரளி கிருஷ்ணகுமார் உள்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற செல்லுலர் சங்கப் பிரதிநிதிகள், புதுவையில் செல்லிடப்பேசி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை அமைக்க மானிய விலையில் நிலம், மின்சாரம் அளித்தால் ஆண்டுக்கு ரூ.100 கோடி முதலீடு செய்யத் தயாராக இருக்கிறோம் என்றனர். இதற்கு முதல்வர் நாராயணசாமி, இந்தத் திட்டச் செயல்பாட்டுக்காக தனி அதிகாரியை நியமிக்க முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com