காங்கிரஸுக்கு வாய்ப்பு கொடுங்கள்: துரைமுருகன்

சட்டப்பேரவையில் பேசுவதற்கு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபாலிடம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.


சட்டப்பேரவையில் பேசுவதற்கு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபாலிடம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது துரைமுருகன் எழுந்து பேசியது:
சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி, அவர்களுக்கு மானியக் கோரிக்கையில் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பேரவைத் தலைவர் மனது வைத்தால் வாய்ப்புக் கொடுக்கலாம். அதிமுக - திமுக உறுப்பினர்களின் நேரத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டாவது, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு 5 நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இதனை முதல்வரும், பேரவைத் தலைவரும் கருணையோடு பரிசீலிக்க வேண்டும் என்றார்.
அப்போது பேரவைத் தலைவர் தனபால் கூறியது:
பேரவைக் கூட்டத்தை சீக்கிரம் பகல் 2.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று நீங்கள்தான் கூறுகிறீர்கள். பிறகு, காங்கிரஸ் பேசுவதற்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறீர்கள். என்ன செய்ய முடியும்? அதுகுறித்து பிறகு பேசுவோம் என்றார்.
கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டங்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8-ஆக இருந்தது. 
 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற எச். வசந்தகுமார்,  நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை  ராஜிநாமா செய்தார். அதனால், தற்போது 7 உறுப்பினர்களே உள்ளனர். இதைக் காரணம் காட்டி, மானியக் கோரிக்கையில் பேசுவதற்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. இதனால், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்திருக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com