நாள் முழுவதும் விவாதம்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

குடிநீர்ப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க நாள் முழுவதும் பேரவை நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தின.
நாள் முழுவதும் விவாதம்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்


குடிநீர்ப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க நாள் முழுவதும் பேரவை நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தின.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு,  தமிழகத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் அளித்திருந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், திமுக, காங்கிரஸ் கட்சிகள் கூறிய கருத்துகள்:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: தமிழகத்தில் 66 சதவீதம் பருவமழை பொய்த்துவிட்டது என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். நீதி ஆயோக் அமைப்பானது, 2020-இல் சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரித்து இருந்தது.
 ஆனால், இப்பொழுது 2019-ஆம் ஆண்டிலேயே சென்னையில் பல குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 6 மிகப்பெரிய அணைகளில், 21 சதவீத நீர் இருப்புதான் உள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில், 45 சதவீதம் இருந்தது. எனவே, தமிழகம் இப்போது குடிநீர் பஞ்சத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 
சென்னை மாநகரின் நீர் ஆதாரத்தைப் பெருக்குவது, புதிய ஏரிகளை உருவாக்குவது போன்ற ஆக்கப்பூர்வமான விவாதங்களை நாம் நடத்த வேண்டும். இதற்காக சட்டப் பேரவையை ஒருநாள் சிறப்பு நேர்வாக ஒதுக்கி அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளையும் கேட்டு விவாதிக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் ராமசாமி: குடிநீர்ப் பிரச்னைகளை தீர்த்து வைப்பது ஆளும்கட்சியினரின் பொறுப்பாகும். குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து விவாதிக்க ஒருநாள் முழுவதும் பேரவை நேரத்தை ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு பகுதி, தொகுதிகளிலும் உள்ள பிரச்னைகளை முதல்வர் அறிந்திட வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com