கேபிள் டிவி கட்டண உயர்வுக்கு யார் காரணம்?: திமுக - அதிமுக விவாதம்

கேபிள் டிவி கட்டண உயர்வுக்கு யார் காரணம் என்பது தொடர்பாக பேரவையில் திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது.
கேபிள் டிவி கட்டண உயர்வுக்கு யார் காரணம்?: திமுக - அதிமுக விவாதம்


கேபிள் டிவி கட்டண உயர்வுக்கு யார் காரணம் என்பது தொடர்பாக பேரவையில் திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் புதன்கிழமை தகவல் தொழில்நுட்பவியல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் அலெக்சாண்டர் பேசும்போது, கேபிள் டிவி கட்டண உயர்வுக்கு சன் டிவிதான் காரணம் என்று கூறினார். 
இதற்கு, திமுக கொறடா அர.சக்கரபாணி தலைமையில் திமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டுக் கூறியது: 
கேபிள் டிவி கட்டண உயர்வுக்கு சன் டிவிதான் காரணம் என்று அதிமுக உறுப்பினர் கூறியதில் தவறு ஒன்றுமில்லை. சன் டிவி ஒரு சேனலுக்குக் கட்டணமாக ரூ.13 வாங்குகிறது. கூட்டாக ரூ.136 கட்டணம் வாங்குகிறது. 
இதனால், கேபிள் கட்டணம் அதிகமாக உள்ளது. சன் டிவி கட்டணத்தைக் குறைத்துக் கொண்டால்,  கேபிள் டிவி கட்டணமும் குறையும் என்றார்.
அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்: 2011-இல் திமுக ஆட்சியில் அரசு கேபிள் தொடங்கப்பட்டு, மூடப்பட்டது. இதற்கு சுமங்கலி கேபிள் விஷன்தான் காரணம். அதன்பிறகு அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டபோது, சன் டிவி மாதத்துக்கு ரூ.15 கோடி தர வேண்டும் என்று கோரியது. ஆனால், மாதம் ரூ. 3 கோடிதான் தருவோம் என்று கொடுத்து வந்தோம். இப்போது மாதம் ரூ.5 கோடிக்கு மேல் கொடுத்து வருகிறோம்.
டி.ஆர்.பி.ராஜா (திமுக): மக்கள் விரும்பும் வகையில் சேனல் நிறுவனத்தாரே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ட்ராய்' கூறியதன் அடிப்படையில் அவர்கள் நிர்ணயித்துக் கொண்டிருக்கலாம்.  
ஆனால்,  சன் டிவியை திமுகவின் சேனல் என்று அமைச்சர் கூறுகிறார். சன் டிவி திமுக சேனல் அல்ல. கலைஞர் டிவிதான் திமுக சேனல்.
உடுமலை கே.ராதாகிருஷ்ணன்: சன் டிவி திமுகவின் சேனல் இல்லை என்றால் திமுக உறுப்பினர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com