சிதறால் மலைக் கோயிலில் கோமுக கல் சேதம்: தொல்லியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் புராதன பெருமை கொண்ட சிதறால் மலைக் கோயிலின் கருவறை கோமுக கல் சேதமாகியுள்ளது தொல்லியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சிதறால் மலைக் கோயிலில் கோமுக கல் சேதம்: தொல்லியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி


கன்னியாகுமரி மாவட்டத்தில் புராதன பெருமை கொண்ட சிதறால் மலைக் கோயிலின் கருவறை கோமுக கல் சேதமாகியுள்ளது தொல்லியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வெள்ளாங்கோடு ஊராட்சியில் திருச்சாரணத்து மலையில்  கி.பி. முதலாம் நூற்றாண்டு மற்றும் முதல் 6-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நிறுவப்பட்ட சமணர் கோயில் உள்ளது. கோயிலின் பக்கவாட்டு பாறையில்,  மகாவீரர் உள்ளிட்ட சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. 
இக்கோயிலை மையமாகக் கொண்டு சமணப் பள்ளி எனப்படும் கல்விக் கூடம் செயல்பட்டதாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் வந்து கல்வி பயின்றதாகவும் இங்குள்ள கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 13-ஆம் நூற்றாண்டில் இக்கோயிலில் பகவதியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின்னர் இக்கோயில் "சிதறாலம்மை கோயில்' என அழைக்கப்பட்டுள்ளது. இப்போது இக்கோயில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வருகை: இக்கோயிலைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதேநேரம், சுற்றுலாப் பயணிகள் போல வரும் சிலர் அத்துமீறி நடக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
இந்நிலையில், அண்மையில் இங்கு வந்த மர்ம நபர்கள் கருவறையின் வடக்கு வெளிப்புறப் பகுதியிலுள்ள "கோமுகம்' எனப்படும் நீர் வெளியேறும் வாய்ப் பகுதியை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது, தொல்லியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதுகுறித்து பொன்மனை பகுதியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் ஐயப்பன் கூறியது: சிதறால் மலைக் கோயில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. ஆனால், இங்கு பாதுகாப்பு, கண்காணிப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன. 
இங்குள்ள கருவறை கோமுகம் உடைந்து காணப்படுகிறது. இதை சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இத்தகைய  செயல்கள் தொடராதவாறு கண்காணிக்க கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com