மாற்றுத்திறனாளியின் உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி

மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளியின் உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி

மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.  

அதில், 1. மன வளர்ச்சி குன்றியோர், கடுமையாக தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் 1,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதிக உதவி தேவைப்படும்  800 மாற்றுத்திறனாளிகள், தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு, மாதாந்திர பராமரிப்புத் தொகையுடன் கூடுதலாக 1,000 ரூபாய் உதவித் தொகை நடப்பு நிதியாண்டில் 96 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
2. தமிழ்நாட்டில், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள் 4 மாவட்டங்களில் அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது, கூடுதலாக 10 மாவட்டங்களில், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உபகரணங்களுடன் கூடிய பகல் நேர
பராமரிப்பு மையங்கள் 2.65 கோடி ரூபாய் செலவில் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும். இதன் மூலம், 250 தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர்.
3. மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக, மானியத்துடன் கூடிய பல்வேறு சுய வேலைவாய்ப்புத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 2018-2019-ஆம் நிதியாண்டில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க, 100 மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்கள் செலுத்த வேண்டிய முன்பணத்தொகை 25,000 ரூபாயை தமிழ்நாடு அரசே செலுத்திடும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டம் மாற்றுத் திறனாளிகளிடம் அதிக வரவேற்பு பெற்றதால், ஆவின் நிறுவனத்திற்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய முன்பணத்தொகை 25,000 ரூபாய் உடன், ஆவின் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு பயனாளிகளுக்கு மானியமாக 25,000 ரூபாய் என மொத்தம் ஒரு பயனாளிக்கு 50,000 ரூபாய் வீதம் 200 பயனாளிகள் பயனடையும் வகையில் நடப்பாண்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை கூறி அமைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com