மக்கள் எண் திட்டம்: ஆதார் எண் அவசியம்

விண்ணப்பம் செய்யாமலேயே பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான அடிப்படை அம்சமான மக்கள் எண் திட்டத்துக்கு ஆதார் எண் அவசியமாகும்
மக்கள் எண் திட்டம்: ஆதார் எண் அவசியம்

விண்ணப்பம் செய்யாமலேயே பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான அடிப்படை அம்சமான மக்கள் எண் திட்டத்துக்கு ஆதார் எண் அவசியமாகும். 
மக்கள் எண் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்திலுள்ள அம்சங்கள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்:
பிறப்பு முதல் இறப்பு வரையில் அரசால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சேவைகளையும் பொதுமக்களுக்கு விண்ணப்பம் ஏதும் இல்லாமல் தாமாகவே முன்வந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவற்றை அளித்திட பயன்படுத்தப்படும் மென்பொருளை தகுந்த முறையில் மாற்றியமைக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முடிவு செய்துள்ளது. தமிழகத்திலுள்ள 7 கோடி மக்களுக்கும் தனித்துவமான எண் வழங்குவதற்காக குடிமகன் பெட்டகம் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தனித்துவமான மக்கள் எண் வாயிலாக குடிமகன் பெட்டகத்தை சம்பந்தப்பட்ட நபருக்குரிய ஆவணங்கள் மின்னணு முறையில் சென்றடையும். ஒவ்வொரு நபரும் தங்களது சான்றிதழ்கள், ஆவணங்களைக் குடிமகன் பெட்டகத்தில் இருந்து பெற்றிட தன்னுடைய செல்லிடப்பேசி எண்ணை பயனர் குறியீடாகவும், ஒருமுறை கடவுச் சொல்லைப் பயன்படுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.
பல்வேறு அரசுத் துறைகள், நிறுவனங்கள் மூலமாக பிறப்பு சான்று முதல் இறப்புச் சான்றிதழ் வரையிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரரின் ஒப்புதலுடன் அவரது உண்மைத்தன்மையை மின்னணு முறையிலேயே அரசுத் துறைகள் சரிபார்க்கலாம்.
குடிமக்கள் எண்: குடிமக்கள் எண்ணைப் பெற தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தில் (www.tnesevai.tn.gov.in) நமது அடிப்படை விவரங்களைப் பதிவு செய்து 
செல்லிடப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல்லைப் பயன்படுத்தி மக்கள் எண் எனப்படும் தனித்துவ எண்ணைப் பெறலாம்.
இவ்வாறு இந்த எண்ணைப் பெறுவதற்கு, ஆதார் எண், செல்லிடப்பேசி எண் ஆகியன அவசியமாகும். இந்த குடிமக்கள் எண்ணைப் பெற்றால், அவை ஒவ்வொரு அரசுத் துறையின் தொடர்பிலும் இருக்கும். நமது தேவையின் நிலையை அறிந்து, பிறப்பு-இறப்புச் சான்றிதழ்களை நாம் விண்ணப்பிக்காமலேயே நமக்கு அளித்திட உதவிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com