பி.இ. கலந்தாய்வு: இரண்டாம் சுற்று முடிவில் 25 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீத சேர்க்கை

பொறியியல் மாணவர் சேர்க்கை இன்னும் இரண்டு சுற்றுகளில் முடிவடைய உள்ள நிலையில், 25 பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 50 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளது தெரியவந்திருக்கிறது.
பி.இ. கலந்தாய்வு: இரண்டாம் சுற்று முடிவில் 25 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீத சேர்க்கை

பொறியியல் மாணவர் சேர்க்கை இன்னும் இரண்டு சுற்றுகளில் முடிவடைய உள்ள நிலையில், 25 பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 50 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளது தெரியவந்திருக்கிறது.

தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டு வரும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வில், இதுவரை இரண்டு சுற்று மாணவர்களுக்கு இடங்கள் இறுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் சுற்று மாணவர்களுக்கான இடங்கள் தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு வருகிற 23-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்த நிலையில், அரசுக் கல்லூரிகள் மற்றும் ஒருசில பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்கள் நிரம்பியிருக்கின்றன.இரண்டாம் சுற்று முடிவில் அரசுப் பொறியயில் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 3,820 இடங்களில் 2,398 இடங்கள் நிரம்பியிருக்கின்றன.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள 2,163 இடங்களில் 2,016 இடங்கள் நிரம்பியுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக துறைகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 8,840 இடங்களில் 3,578 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. மத்திய அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்றுள்ள 185 இடங்களில் 161 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1,51,574 பொறியியல் இடங்களில் 13,379 இடங்கள் மட்டுமே நிம்பியுள்ளன. 1,38,195 இடங்கள் சேர்க்கையின்றி உள்ளன.

மொத்தமாக, 1,66,582 இடங்களில் 21,532 இடங்கள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. 1,45,050 இடங்கள் காலியாக உள்ளன.

25 கல்லூரிகளில் மட்டும் 50 சதவீதத்துக்கு மேல்...: இதில் காரைக்குடி மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம், கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி, சென்னை எஸ்.எஸ்.என். கல்லூரி, கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோவை தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (சிஐடி), கோவை அரசு பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி,  அண்ணா பல்கலைக்கழக கோவை வளாகம், தஞ்சாவூர் பொறியயில் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 11 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 90 சதவீதம் முதல் 100 சதவீத இடங்கள் நிரம்பியிருக்கின்றன. மேலும் 14 பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதம் முதல் 89 சதவீத இடங்கள் நிரம்பியிருகின்றன. மீதமுள்ள 450-க்கும் அதிமான கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com