தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பேன்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். 
தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பேன்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ


நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். 
சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
மாநிலங்களவை உறுப்பினராக 23 ஆண்டுகளுக்குப் பிறகு பதவிப் பிரமாணம் செய்துகொள்ள இருக்கிறேன்.
முதல் முறையாக நான் எம்.பி.யான போது முரசொலி மாறன் என்னை நாடாளுமன்றத்தில் ஆதரித்தார். இப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை வலுகட்டாயமாக எம்.பி.யாக்கி தில்லிக்கு அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு நன்றி.
தற்போது தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கி இருக்கிறது. மேக்கேதாட்டு அணை வந்தால், தமிழகத்தில் காவிரி பாழாகும். ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தமிழகம் சகாரா பாலைவனமாகும்.
மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வைத் தொடர்ந்து, நெக்ஸ்ட் எனும் தேர்வுத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. நீண்ட நாள்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் செல்கிறேன். தமிழகத்தின் உரிமையைக் காப்பதற்காக குரல் கொடுப்பேன் என்றார் வைகோ.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com