வேலூர் மக்களவைத் தேர்தல்: ஆக. 5-இல் பொது விடுமுறை

வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்தத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 


வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்தத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 5-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. வாக்குப் பதிவானது வேலை நாளான திங்கள்கிழமை நடைபெறுவதால், அந்த மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
1881-ஆம் ஆண்டு செலவாணி முறிச் சட்டத்தின் கீழ் இந்த விடுமுறை விடப்படுகிறது. அதன்படி, பொது விடுமுறை தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பினை அளிக்க வேண்டும். வேலூர் மற்றும் அந்தத் தொகுதிக்கு உள்பட்டு வரக்கூடிய அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும்.
அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த தொழிற்சாலைகள், அரசு நிர்வகிக்கும் அமைப்புகள், அனைத்துக் கல்வி நிலையங்கள் ஆகியன வரும் 5-ஆம் தேதியன்று மூடப்பட்டு இருக்கும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com