சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சிறந்த மேலாண்மைக்கான மத்திய அரசு விருது

புலிகள் பாதுகாப்பில் சிறந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் விருதுக்கு,  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

புலிகள் பாதுகாப்பில் சிறந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் விருதுக்கு,  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 
இதற்கான விருதை தில்லியில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வழங்க உள்ளார்.
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை சார்பில் ஆண்டுதோறும் உலக புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, புலிகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் காப்பகங்களுக்கு பல்வேறு பிரிவின்கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி,  இந்த ஆண்டு புலிகள் பாதுகாப்பில் சிறந்த மேலாண்மைக்கான விருதுக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத் துறை உயரதிகாரிகள் கூறுகையில், "மத்திய அரசின் புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 2018-ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் புலிகளின் பாதுகாப்பு, புலிகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், புலிகள் பாதுகாப்பில் உள்ளூர் மக்களின் பங்களிப்பு போன்ற 30 தகுதிகளை அடிப்படையாக வைத்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில்,  இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நாகநாதன் பெற உள்ளார் என்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் அமைந்துள்ள இந்த புலிகள் காப்பகம் கடந்த 2008-இல் தொடங்கப்பட்டதாகும். 1,411 சதுர கி.மீ. கொண்ட இந்த காப்பகம் 
தமிழ்நாட்டின் மிகப் பெரிய புலிகள் காப்பகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com