ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?: உயர்நீதிமன்றம் கேள்வி

அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?: உயர்நீதிமன்றம் கேள்வி

அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 சென்னை தாம்பரம் முகாம் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற கார், தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானது.
 இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் திங்கள்கிழமை வழக்கம்போல் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார். அப்போது அவர் தாம்பரத்தில் நடந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. சாலையில் சென்ற 4 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாகக் கருத்து தெரிவித்தார். வாகன விபத்துகளின் எண்ணிக்கை தற்போது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
 அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் வாகனங்களை ஓட்டுவதால்தான் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என அரசு தரப்பு வழக்குரைஞர் முகமது ரியாஸிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அரசு தரப்பு வழக்குரைஞர், இதுதொடர்பாக போலீஸாரிடம் கேட்டு தெரிவிப்பதாகக் கூறினார்.
 இதனையடுத்து நீதிபதி, அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களின் மோட்டார் வாகன உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? கவனக்குறைவாகவும், வேகமாகவும் வாகனங்களை ஓட்டி மரணத்தை ஏற்படுத்தும் குற்றத்துக்கான தண்டனையை 2 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டப்பிரிவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக போலீஸார் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்யப்படும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வரும் 17-ஆம் தேதி முடிவு செய்யப்படும் எனக் கூறி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com