மக்கும் குப்பைகளைத் தாங்களே கையாள தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்: நீதிபதி பி.ஜோதிமணி

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் நிறுவனங்களில் சேகரமாகும் மக்கும் குப்பைகளை
மக்கும் குப்பைகளைத் தாங்களே கையாள தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்: நீதிபதி பி.ஜோதிமணி

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் நிறுவனங்களில் சேகரமாகும் மக்கும் குப்பைகளை தாங்களே கையாள முன்வர வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாய மாநில கண்காணிப்புக் குழுத் தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி தெரிவித்தார்.
 சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மொத்த திடக்கழிவு உற்பத்தியாளர்களால் சேகரமாகும் கழிவுகளைக் கையாள்வது குறித்த கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டம் தேசிய பசுமைத் தீர்ப்பாய மாநில கண்காணிப்புக் குழுத் தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி தலைமையில் ரிப்பன் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பி.ஜோதிமணி பேசியதாவது: திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-இன் படி நாளொன்றுக்கு 100 கிலோ குப்பை உற்பத்தி செய்வோர் அல்லது 5000 ச.மீ.பரப்பளவு கொண்ட உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், குடியிருப்பு வளாகங்கள் போன்றோர் தங்கள் இடங்களில் சேகரமாகும் கழிவுகளிலிருந்து மக்கும் குப்பை வகைகளைப் பிரித்து தாங்களே கையாள வேண்டும். மொத்த திடக்கழிவு உற்பத்தியாளர்கள் குப்பைகளைக் கையாள போதிய இடவசதி இல்லையெனில், அருகில் உள்ள மாநகராட்சியின் உரக்கிடங்கு கூடங்களில் அவற்றைச் சேர்க்கலாம் என்றார். இந்தக் கூட்டத்தில், மக்கும் குப்பைகளைக் கையாளும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், துணை ஆணையர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, நகராட்சி நிர்வாக இணை ஆணையர் கலைச்செல்வி மோகன், தமிழ்நாடு ஹோட்டல்கள் உரிமையாளர் சங்கம், தங்கும் விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com