கேரளத்தை ஒட்டிய பகுதிகளில் இன்று  பலத்த மழைக்கு வாய்ப்பு

தென்மேற்குப் பருவ மழை கேரளத்தில் தொடங்கியுள்ள நிலையில், அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் சில பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்குப் பருவ மழை கேரளத்தில் தொடங்கியுள்ள நிலையில், அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் சில பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: 
தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களின் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (ஜூன் 13) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில்  மிதமான மழை பெய்யக் கூடும். 
அதேநேரத்தில், திருவள்ளூர், சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப நிலை வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.
மழை அளவு: புதன்கிழமை காலை 8.30 நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் தேவலா 100 மி.மீ., வால்பாறை 60 மி.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் சின்னகல்லாறு , கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் - 40 மி.மீ.,
வெயில் சதம்: தமிழகத்தில் புதன்கிழமை பல இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக திருத்தணி, சென்னை மீனம்பாக்கத்தில் தலா 107 டிகிரி பதிவானது. 
நுங்கம்பாக்கம், வேலூரில் தலா 105 டிகிரி, கடலூர், திருச்சியில் தலா 104 டிகிரி பதிவானது. 
அதேபோன்று பரங்கிப்பேட்டையில் 103 டிகிரி, நாகப்பட்டினத்தில் 102 டிகிரி, மதுரை விமானநிலையத்தில் 101 டிகிரி, அதிராமப்பட்டினம், தொண்டியில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com