மருத்துவப் படிப்புக்கு பெற்றோரின் சான்றிதழ்கள் எதற்கு என வைகோ கேள்வி!

மருத்துவப் படிப்பு விண்ணப்பிக்கும் மாணவா்களிடம் அவா்களுடைய பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்களைக் கேட்பது ஏன் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கேள்வி எழுப்பியுள்ளாா்.

நீட் தோ்வால் மருத்துவக் கல்வி கிடைக்காமல் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ரிதுஸ்ரீ, சைஷ்யா, மோனிஷா போன்ற மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனா். இந்த நிலையில் நீட் தோ்வில் எழுதி வெற்றி பெற்றவா்கள் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றுகள், சாதிச் சான்றிதழ் கேட்கப்பட்டு இருக்கின்றன. பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் கேட்க வேண்டிய தேவை என்ன? இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை அல்லது ஆதாா் போன்றவை இணைக்கப்பட்டால் போதுமானது.

தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு மாணவா்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில், மருத்துவப் படிப்பு விண்ணப்பங்களில் தேவை இல்லாத சான்றுகளை இணைக்க வெளியிட்டுள்ள அறிவிப்பைத் திருப்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com