நடிகர் சங்கத் தேர்தல்: பதிவாளர் அலுவலகம் நோட்டீஸ்

நாசர் அணி நிர்வாகத்தால் காரணமின்றி நடிகர் சங்க உறுப்பினர்கள் நீக்கப்பட்டது குறித்த புகாருக்கு சங்கங்கள் பதிவாளர் அலுவலகம் விளக்கம் கேட்டுள்ளது.
நடிகர் சங்கத் தேர்தல்: பதிவாளர் அலுவலகம் நோட்டீஸ்

நாசர் அணி நிர்வாகத்தால் காரணமின்றி நடிகர் சங்க உறுப்பினர்கள் நீக்கப்பட்டது குறித்த புகாருக்கு சங்கங்கள் பதிவாளர் அலுவலகம் விளக்கம் கேட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
நாசர்,  விஷால் தலைமையில் பாண்டவ அணியும், பாக்யராஜ், ஐசரி கே.கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும்  தேர்தலை எதிர்கொள்கின்றன. இதற்காக இரு அணியினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாசர் அணி நிர்வாகத்தால் முறையான காரணமின்றி நீக்கப்பட்டதாகக் கூறி 61 சங்க உறுப்பினர்கள் பட்டியலை இணைத்து பாரதி பிரியன் என்பவர் புகார் அளித்துள்ளார்.  இந்தப் புகாரின்  அடிப்படையில் நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்டுள்ளது சங்கங்கள் பதிவாளர் அலுவலகம்.
மேலும், நீக்கிய உறுப்பினர்களை மீண்டும் சங்கத்தில் இணைத்த பின்னரே தேர்தல் நடைபெறும் சூழ்நிலையும் தற்போது உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com