செல்லிடப்பேசி மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை அறியலாம்

வேலைவாய்ப்புகளை பெற்றுத் தர வழி செய்திடும் முகாம்கள் குறித்த தகவல்களை செல்லிடப்பேசி மூலமாக அறிந்து கொள்ளலாம் என்று


வேலைவாய்ப்புகளை பெற்றுத் தர வழி செய்திடும் முகாம்கள் குறித்த தகவல்களை செல்லிடப்பேசி மூலமாக அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நெறி வழிகாட்டும் மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையாளர் பா.ஜோதி நிர்மலாசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பணி பெறும் திறனை உயர்த்துவதற்கான பணியை தொழில் நெறி வழிகாட்டும் மையம் மேற்கொண்டு வருகிறது.  
தனியார் துறையில் வேலை வேண்டுமென விரும்புவோர், அந்த மையத்தின் இணையதளத்தில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம். இதனால், தனியார் துறையில் பணியிடங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். 
இந்த மையத்தில் ஒவ்வொரு நாளும் வேலை அளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் இடையே சந்திப்புகள் நடத்தப்படும்.
வேலைவாய்ப்பு முகாம்கள், பயிற்சி வகுப்புகள், மையத்தின் இதர செயல்பாடுகள் குறித்து செல்லிடப்பேசி வழியாக பட்டதாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மாநில மற்றும் மத்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு மாதிரித் தேர்வுகள், மாதிரி நேர்காணல்கள் ஆகியவற்றுடன் கூடிய சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
இதுகுறித்த விவரங்களை அறிய 044-22500134, 29530134 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com