தூத்துக்குடியில் காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு அதிகம்: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தகவல்

தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை மற்றும் வாகனப் புகையால் காற்றின் தரம் பாதிக்கப்படுகிறது. இதைக் கண்காணிக்கும் வகையில் தமிழகத்தில் 28 இடங்களில் தேசிய காற்று தர கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் காற்று மாதிரி சேகரிப்பான் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் வாரம் இருமுறை காற்று மாதிரிகள் எடுக்கப்படுகிறது. இதில், சுவாசிக்கும்போது உட்செல்லக் கூடிய 10 மற்றும் 2.5 மைக்ரான் அளவுக்குள்பட்ட மிதக்கும் நுண்துகள், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகிய வாயுக் கழிவுகளின் அளவுகள் கண்டறியப்படுகின்றன.
இதில், காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் சில இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு சராசரி அளவான 60 மைக்ரோகிராமை விட அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு காற்று மாசு அளவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com