குடிநீர்ப் பிரச்னையை அரசியலாக்கக் கூடாது: அமைச்சர் டி.ஜெயக்குமார்

குடிநீர்ப் பிரச்னையை அரசியலாக்கக் கூடாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
குடிநீர்ப் பிரச்னையை அரசியலாக்கக் கூடாது: அமைச்சர் டி.ஜெயக்குமார்


குடிநீர்ப் பிரச்னையை அரசியலாக்கக் கூடாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
சென்னை நந்தம்பாக்கத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பற்றி முழுவதுமாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. சட்டப் பேரவைத் தேர்தல் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படுகிறது. ஆனால், மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. 
எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அதற்கெல்லாம் விடைகள் காணப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசின் சார்பிலும், கட்சியின் சார்பாகவும் கருத்துகளைத் தெரிவிப்போம்.
நீர் மேலாண்மையைப் பொருத்தவரையில் தமிழக அரசு எவ்வளவு செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு பணிகளைச் செய்துள்ளது. குடிமராமத்துப் பணிகள் போன்ற பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. நிகழ் நிதியாண்டில் கூட குடிமராமத்துத் திட்டப் பணிக்கு ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென் சென்னை பகுதியில் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டப் போகிறார். இதேபோன்று, சென்னையை அடுத்த பேரூரில் 500 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கும் அனுமதி கோரியுள்ளோம்.
குடிநீர் தட்டுப்பாடு:  40 சதவீத மழை மட்டுமே பெய்துள்ளது. இந்தச் சூழ்நிலையையும், அரசு எதிர்கொண்டு சமாளித்து வருகிறது. இந்தப் பிரச்னையில் அரசியல் செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இயற்கை கைகொடுக்காத நிலையில், 500 லாரிகள் மூலமாக 9 ஆயிரம் நடைகள் தினமும் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. 
மேட்டூரில் இருந்து 1 டி.எம்.சி. நீரை வீராணத்துக்குக் கொண்டு சேர்த்து அதன் வழியாக தண்ணீர் கொடுத்து வருகிறோம். 
நவம்பர் வரையில் முழுமையான அளவுக்கு தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வோம். அதற்குள்ளாக மழை வரும். பிரச்னை தீர்க்கப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com