சிமி இயக்கத்தின் மீதான தடை குறித்து விசாரிக்க குன்னூரில் 3 நாள்கள் தீர்ப்பாய அமர்வுக் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

சிமி இயக்கத்தின் மீதான தடை தொடர்பாக விசாரிக்க குன்னூரில் ஜூன் 22 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை தீர்ப்பாயத்தின் அமர்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

சிமி இயக்கத்தின் மீதான தடை தொடர்பாக விசாரிக்க குன்னூரில் ஜூன் 22 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை தீர்ப்பாயத்தின் அமர்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிமி எனப்படும் இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கம் மீதான தடையை விசாரிக்க தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்தின் அமர்வு, குன்னூர் நகர்மன்ற அலுவலக கூட்டரங்கில் ஜூன் 22 -ஆம்தேதி முதல் 24 -ஆம் தேதி வரை  விசாரிக்க உள்ளது.  எனவே, இப்பிரச்னை தொடர்பாக சாட்சியம் அளிக்க விரும்பும் நபர்கள் தீர்ப்பாயம் நடைபெறும் 3 நாள்களிலும் நேரில் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com