ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் ரூ.28 கோடியில் பசுமைப் பூங்கா: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை அருகே ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரி ரூ.28 கோடியில் புதுப்பிக்கப்பட்டு பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி, நடைப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் ரூ.28 கோடியில் பசுமைப் பூங்கா: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்


சென்னை அருகே ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரி ரூ.28 கோடியில் புதுப்பிக்கப்பட்டு பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி, நடைப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டத்தில் பருத்திப்பட்டு ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வகையில், ரூ.28.16 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
புதிய வசதிகள் என்ன?: இங்கு பசுமைப் பூங்கா தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்தப் பூங்காவில் ஏரியை சுற்றிலும் 3 கி. மீட்டர் நீளத்துக்கு பொது மக்கள் நடைபயிற்சி செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடைபாதை, திறந்தவெளி அரங்கம், பார்வை மேடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், சிற்றுண்டி கட்டடம், படகுகள் மூலம் ஏரியின் அழகை கண்டுகளிக்க படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பணைகள் திறப்பு: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை ஆட்ரம்பாக்கம் கிராமத்தின் அருகில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே தடுப்பணையும், வேலூர் மாவட்டம் மலட்டாற்றின் குறுக்கே நிலத்தடி தடுப்புச் சுவர், கடலூர் மாவட்டம் வீசூர், பெரிய காட்டுப்பாளையம் ஓடைகள் புனரமைப்புத் திட்டம், வீசூர் கிராமத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை கெடிலம் ஆற்றினை புனரமைத்து வலுப்படுத்தும் திட்டம் ஆகியவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார் முதல்வர் பழனிசாமி.
இதேபோன்று, சேலம் மாவட்டம் பெரியபள்ளம் ஓடையின் குறுக்கே தடுப்பணை, திருச்சி கல்லணைக் கால்வாயின் குறுக்கே புதுப்பிக்கப்பட்ட பாலம், மதுரை மாவட்டம் சௌதார்பட்டி அணைக்கட்டில் இருந்து திரளி அணைக்கட்டு வரை மேற்கொள்ளப்பட்ட நதி புனரமைப்புத் திட்டம் ஆகியவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் விருப்பாட்சி கிராமத்தின் அருகே நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை, குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை, திருநெல்வேலி மாவட்டம் எலுமிச்சையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட படுகை அணை, ராஜாக்கமங்கலம் அணைக்கட்டுக்குக் கீழே தடுப்பணை, வீரகேரளம்புதூர் அனுமன்நதியின் குறுக்கே தடுப்பணை ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கேயும், கோவில்பட்டி வட்டம் ஆவுடையம்மாள்புரம் கிராமத்தில் உப்போடை ஆற்றின் குறுக்கே தடுப்பணையும், விருதுநகர் உப்போடை ஆற்றின் குறுக்கே தடுப்பணையையும் முதல்வர் பழனிசாமி திறந்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com