சுடச்சுட

    

    28ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: தலைமைக் கழகம் அறிவிப்பு

    By DIN  |   Published on : 26th June 2019 01:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    admk

    வரும் 28-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
    தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2019-20 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத்தொடர்ந்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழகத்தில் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு, கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

    இக்கூட்டத்தில், கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai