மாசு ஏற்படுத்தினாலும் ஆலையை மூடுவது தீர்வல்ல: நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வாதம்

மாசு ஏற்படுத்தியிருந்தாலும் அதற்காக ஆலையை மூடுவது தீர்வாகாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மாசு ஏற்படுத்தினாலும் ஆலையை மூடுவது தீர்வல்ல: நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வாதம்


மாசு ஏற்படுத்தியிருந்தாலும் அதற்காக ஆலையை மூடுவது தீர்வாகாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 4-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில், தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக சுற்றுச்சூழல் துறை மற்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் , பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் சார்பில் இரண்டாவது நாளாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.ஆர்யமாசுந்தரம், தூத்துக்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் 3 அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட 67 தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது ஒரு தலைபட்சமானது. ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியே ஆலை மாசு ஏற்படுத்தியிருந்தாலும் கூட ஆலையை மூடுவது தீர்வாகாது. மேலும், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தவிர்த்து ஆலையை மூடுவதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட காற்று, நிலத்தடி நீர் ஆகியவற்றில் இருந்த மாசின் அளவுகள் வரம்புக்குள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனை மறைத்து தமிழக அரசு ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. தாமிரக்கழிவுகள் அபாயகரமானதாக இருந்தால் அவற்றைக் கொண்டு சாலைகள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டிருக்காது. இந்த கழிவுகள் விஷத்தன்மை கொண்டவை அல்ல என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறி வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com