யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: ஜூலை 1- இல்  விண்ணப்ப விநியோகம்

இயற்கை மருத்துவம் - யோகா படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 1-ஆம் தேதி  தொடங்குகிறது.


இயற்கை மருத்துவம் - யோகா படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 1-ஆம் தேதி  தொடங்குகிறது.
 பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.
அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் என  6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. 
இதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள்  உள்ளன. 
அவற்றில் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மட்டும் நிகழாண்டில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. 
இந்நிலையில், அதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org   ஆகிய  இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம், அல்லது யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். 
 ஜூலை 19-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பாரம்பரிய மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com