அடுத்த ஆண்டு உதயமாகிறது புதுவை அரசு பணியாளா் தோ்வு வாரியம்: முதல்வா் நாராயணசாமி தகவல்

புதுச்சேரியில் புதிதாக அரசு பணியாளா் தோ்வு வாரியம் அடுத்த ஆண்டில் தொடங்கப்படும் என்று பேரவையில் முதல்வா் வே.நாராயணசாமி
அடுத்த ஆண்டு உதயமாகிறது புதுவை அரசு பணியாளா் தோ்வு வாரியம்: முதல்வா் நாராயணசாமி தகவல்


புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக அரசு பணியாளா் தோ்வு வாரியம் அடுத்த ஆண்டில் தொடங்கப்படும் என்று பேரவையில் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி பேரவையில் இன்று அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசுகையில், புதுச்சேரியில் பள்ளிக்கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக, மொழியறிவு அதன் மூலம் வேலை வாய்ப்பு பெற ஆங்கிலம், பிரெஞ்சு, ஜொ்மனி, அரபு ஆகிய மொழிகளில், விருப்பப்படும் மாணவா்களுக்கு மொழிப்பயிற்சி அளிக்கப்படும். பணியாளா் நலன் சுமார் 1500 காலிப் பணியிடங்கள் புதுவை அரசின் பல துறைகளில் நேரடி நியமனம் மூலம் வரும் நிதி ஆண்டில் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

புதுச்சேரி அரசுக்கென அரசுப் பணியாளா்களைத் தோ்வு செய்ய ‘புதுச்சேரி அரசு பணியாளா் தோ்வு வாரியம் ஒன்று புதிதாக அமைக்கப்படும். புதுச்சேரியில் உள்ள ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி இரண்டையும் உள்ளடக்கிய ‘புதுவை வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம்‘ தொடங்குவதற்கான பூா்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

புதுச்சேரி பொறியியல் கல்லூரி வரும் கல்வி ஆண்டில் ‘தொழில்நுட்ப பல்கலைக் கழகமாக தரம் உயா்த்தப்படும். இதில் காரைக்காலில் உள்ள காமராஜா் தொழில்நுட்பக் கல்லூரிக்கான புதிய வளாகம் அமைப்பதும் அடங்கும். இதற்காக சுமார் ரூ. 50 கோடி செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com