திமுக எந்த மதத்துக்கும் விரோதமானது அல்ல: மு.க.ஸ்டாலின்

திமுக எந்த மதத்துக்கு விரோதமானது அல்ல என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக எந்த மதத்துக்கும் விரோதமானது அல்ல: மு.க.ஸ்டாலின்

திமுக எந்த மதத்துக்கு விரோதமானது அல்ல என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி வெளியிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பது:
சுயநலத்துக்காகவும், பதவி ஆதாயத்துக்காகவும் அதிமுகவினர் மத்தியில் ஆளும் பாஜகவிடம் கையேந்தியுள்ளனர். 
தமிழகத்தின் தன்மானம் தில்லியில் சிறைபட்டுள்ளது. தமிழகத்தின் சுயமரியாதையை மீட்டெடுக்க வேண்டும்.
ஒரே  இந்தியா ஒரே மதம் என்னும் கோஷத்தை  புகுத்தப் பார்க்கின்றனர். தமிழகத்தை ஆட்சி புரிபவர்களும் அவர்களுக்குத் துணைநிற்கின்றனர்.  திமுக  ஒரு மதத்துக்கும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் எதிரானது என்று பொய்யைப் புனைந்து பரப்பிவருகின்றனர். 
ஆனால் அது உண்மையல்ல. பிரிவினைவாத சக்திகளுக்கும், மதவெறியர்களுக்கும்தான் நாம் பரம்பரை எதிராளியே தவிர, எந்த ஒரு தனி மனிதனுக்கும் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி வாழ்த்து: கருணாநிதியின் மறைவையொட்டி மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று கூறியிருந்தார். அதனால், திமுகவினர் ஏழை எளியோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி எளிய முறையில் ஸ்டாலின் பிறந்த நாளை தமிழகம் 
முழுவதும் கொண்டாடினர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுட்டுரை வாயிலாக ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். அதைப்போல பல்வேறு கட்சித் தலைவர்களும் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com