திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்க்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்க்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக, அதன் தோழமை கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இன்று நடந்த பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது.

இதையடுத்து, திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இவ்விரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதற்கான ஒப்பந்தமும் இன்று கையெழுத்தானது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், 
"திமுக -இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். எங்களது கட்சியின் சின்னமான கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடுவோம்.

இந்த தேர்தலை தொடர்ந்து, காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இடைத்தேர்தலிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுக்கு தான் ஆதரவு அளிக்கும். நாளும் நமதே, நாடாளுமன்றமும் நமதே, நாற்பதும் நமதே" இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com