திமுக கூட்டணியில் இழுபறியா..? கூட்டணி கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதை அடுத்து, தொகுதி பங்கீடு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக,
திமுக கூட்டணியில் இழுபறியா..? கூட்டணி கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதை அடுத்து, தொகுதி பங்கீடு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.  

மக்களவைத் தேர்தலில் தேமுகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் முயற்சி செய்து வந்தன. தேமுதிகவிடம் இருந்து முறையான பதில் வராததால், கூட்டணிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு திமுக வந்துவிட்டது. ஆனால், தேமுதிகவுடனான கூட்டணிக்கு அதிமுக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் நாளை கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் விஜயகாந்த். 

இதனிடையே அதிமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய திமுக தீவிரம் காட்டி வருகிறது. 

அந்த கட்சிகளுடன் இன்று 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குழுவினருடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். 

ஆலோசனையை முடித்துக்கொண்டு அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு ஸ்டாலின், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். ‌

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com