ரூ.2000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

வருமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 
ரூ.2000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: வருமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில், மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதியுதவிக்கான வங்கி சான்றிதழை வழங்கி திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பயனாளிகளின் வங்கி கணக்குகளில்  2 ஆயிரம் ரூபாய் நிதி தொடர்ந்து செலுத்தப்படும். குடும்ப தலைவியின் வங்கி கணக்கிலேயே இந்த சிறப்பு நிதி செலுத்தப்பட உள்ளது.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்றனர். 

இதோபோன்று சென்னை சாந்தோம் அம்மா உணவகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com