விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள்: சுமுகதீர்வு காண இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை 

விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் நிறுவும் திட்டம் தொடர்பான விவகாரத்தில் சுமுகதீர்வு காண, அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள்: சுமுகதீர்வு காண இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை 

சென்னை: விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் நிறுவும் திட்டம் தொடர்பான விவகாரத்தில் சுமுகதீர்வு காண, அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 13 மாவட்டங்களில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் விவசாய சாகுபடி நிலம் பாதிக்கும் என புகார் தெரிவித்துள்ளனர். உயர்மின் வழிப்பாதை அமைக்கும் திட்டத்தை விவசாயிகள் எதிர்க்கவில்லை. அமைக்கப்படும் மின்பாதை சாகுபடி நிலங்களை பாதிக்காமல் சாலையோரங்களில் புதைக்கப்படும் கேபிள்கள் மூலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

கடந்த சில மாதங்களில் காத்;திருப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம்  உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட போது ‘பேசி தீர்வு காணலாம்’ என அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த உறுதி மொழிப்படி அரசு பேச்சு வார்த்தைக்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அலட்சியப்படுத்தி வருவதால் விவசாயிகள் கடந்த 3 ஆம் தேதியிலிருந்து நாமக்கல் மாவட்டம், படவீடு பேரூராட்சியில் உள்ள சாமண்டூரில் காலவரையற்ற உண்ணாவிரம் இருந்து வருகின்றனர். இதில் 13 மாவட்டங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கை மீது அரசு தொடர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு சுமுகதீர்வுகாண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com